சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பயணிகள் முனையம் ஒன்றை ஏவுகணை தாக்கியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அவசர மருத்துவ சேவைகள் விமான நிலையத்தை நோக்கி விரைந்ததாகக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
