1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு விசாணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நேற்று (05.08.2026) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் வழக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான குருக்கள்மடம் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று களுவாஞ்சிகுடி நீதவான் நீதி மன்றில் மேலதிக விசாரணைகளுக்காகவும், வழக்கு மாநாட்டுக்காகவும் அழைக்கப்பட்டிருந்தது. நேற்று அறிவித்தல தினமாக இருந்தது.
கடந்த விசாரணை தவணையிலே, பிரதான சட்ட வைத்திய அதிகாரி, மட்டக்களப்பு காணி பதிவாளர், பிரதேச செயலாளர், தொல்லியல் திணைக்களம், அதேபோன்று காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்திற்கும் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் நேற்றைய , காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தின் சார்பாக அவர்களது சட்டத்தரணி பிரசன்னமாகியிருந்தார். ஏனையவர்கள் மன்றுக்குச் சமூகமளித்திருக்கவில்லை.
அந்தவகையிலே இந்த வழக்கு எதிர்வருகின்ற 2026.08.24 ஆம் திகதி மேலதிக நடவடிக்கைகளுக்காகவும், வழக்கு,தவணையிடப்பட்டுள்ளது.
