மத்திய கென்யாவில் உள்ள பெண்கள் உறைவிடப் பள்ளியில் குறைந்தது 16 மாணவிகள் உயிரிழந்ததாகவும், 73 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய கென்யாவில் உள்ள ஒரு பெண்கள் உறைவிடப் பள்ளியில் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் நடந்த சம்பவத்தில் குறைந்தது 16 மாணவிகள் உயிரிழந்ததாகவும், 73 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கில்கிலில் உள்ள உதுமிஷி பெண்கள் அகாடமி மேல்நிலைப் பள்ளியில் அதிகாலை 1:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஆனால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகக் கழித்துதான் இது குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கென்ய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
முதலுதவிப் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் குழுவினர் மற்றும் எங்கள் ஆதரவுப் பணியாளர்கள் தற்போது களத்தில் உள்ளனர் என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பிரெஞ்சு செய்தி நிறுவனமான ஏஎஃப்பியிடம் தெரிவித்தார்.
தீ விபத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
