இலங்கையின் சிறைச்சாலைகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறைவாசம் அனுபவிக்கும் பிக்குமாரின் பெயர்ப்பட்டியல் மகாநாயக்க தேரர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்தநிலையில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் பெறப்பட்ட குறித்த பெயர்ப்பட்டியலை உடனடியாக மகாநாயக்க தேரர்களிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
