சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி 70-வது வயதில் காலமானார்.
பிறந்த இவருக்கு, ராம்குமார், பிரபு என்ற இரு தம்பிகளும், ராஜ்வி (தேன்மொழி)
என்ற ஒரு தங்கையும் உள்ளனர்.
சிவாஜி கணேசன் தனது மூத்த மகள் சாந்தியின் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தார். சென்னை அண்ணா சாலையில் சிவாஜி கணேசன் கட்டிய புகழ்பெற்ற ‘சாந்தி தியேட்டர்’ இவரது நினைவாகவே பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு நாராயணசாமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சத்தியலட்சுமி என்ற மகள் உள்ளார்.
பொதுவாகத் திரை வெளிச்சத்தில் இருந்து தள்ளியே இருந்த சாந்தி நாராயணசாமி, குடும்பத்தின் பாரம்பரிய நிறுவனமான ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’ மூலம் திரைப்படத் தயாரிப்பிலும் பங்களித்துள்ளார்.
2020-களின் தொடக்கத்தில், தங்களுக்குச் சேர வேண்டிய பூர்வீகச் சொத்துரிமை மற்றும் பங்குகளைக் கேட்டு தனது தங்கை ராஜ்வியுடன் இணைந்து நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தியதன் மூலம் இவர் ஊடகங்களின் கவனப் பெற்றார்.
சாந்தி நாராயணசாமி உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை தனது
70-வது வயதில் காலமானார்.
அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்!
