வடமேற்கு ஜெர்மனியில் ஒரு வீட்டின் கூரையின் மீது சிறிய தனியார் விமானம் மோதியதில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஓல்டன்பர்க்கிற்கு அருகிலுள்ள காண்டர்கேசி என்ற குடியிருப்புப் பகுதியில், சிறிய விமானம் ஒரு வீட்டின் சாய்வான கூரையின் மீது நேருக்கு நேர் மோதியது.
பிரேமனைச் சேர்ந்த 65 மற்றும் 77 வயதுடைய இரு ஆண்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும், மற்றொருவரைக் காணவில்லை என்றும் காவல்துறை முதலில் தெரிவித்திருந்தது.
ஆனால், விமானத்தின் சிதைவுகளை மீட்கும் நீண்ட மற்றும் சிக்கலான மீட்புப் பணிகளுக்குப் பிறகு விபத்தில் இரு ஆண்களும் உயிரிழந்ததை காவல்துறை உறுதி செய்துள்ளது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
