பொன் பார்த்தீபன்![]()
மிகச் சிறந்த ஆளுமை மிக்க கலைஞன்
மழைப் பொழிவாய் குரல் அலையில்
கொடிகட்டி பறக்கும் இளைஞன்
இசை வழியே இன்பக்கவிகளை இனிக்க வைக்கும் பிரியன்
பிறர் கலையை தன் கலையாய் மதித்து
உலகெங்கும் எடுத்து செல்லும் கவிஞன்![]()
மிகச் சிறந்த அறிவிப்பாளன்
பல சிலுவைகளை சுமந்தும் பயணிக்கும்
யேசு பாலன்
இசை கலை என எப்போதும் அலைபோல்
கரை தொட எழுந்து வரும் பேராற்றல்கொண்ட வீரன்
மனவளம் காக்க மானுடம் பூக்க தினம்
பலதை உரைக்கின்ற தமிழ் மாறன்![]()
பத்தோடு ஒன்றாக இருக்காமல்
தனி முத்தாக வெளி வர தவமிருக்கிறான்
நாளும் பல பாடல்களை ஒலிபரப்பி
வாழும் உறவுகளுக்கு வசந்ததை நிரப்பி
தனித்தே நின்று வடமிழுக்கிறான்![]()
காலச் சூறாவளியால் கரை ஒதுங்கி இருந்தாலும்
கல்வியின் மேன்மை கொண்டு
தலைமுறைக்கு வகுப்பு எடுக்கிறான்
கலையின் தலைவருடி பல கலைஞர்களின்
புதையல்களை தேடி எடுத்து
புகழ் கொடுக்கிறான்![]()
வளர்ந்த கலைஞர்களே இவன் பக்கம் கொஞ்சம் நடந்து வாருங்கள்
வளரும் கலைஞர்களே இவனோடு
ஒரு தடவை பேசிப் பாருங்கள்
தலைவருடி தாயவள் உச்சி முகர்ந்தது போல்
தங்கள் கலை தானாக இன்னும் மகிழ்ந்தாடும்
அழகு தமிழ் கலைஞன் பொன்- பார்த்தீபன் மனமும் மலர்ந்தாடும்![]()
தமிழைக் கவிதையை இசையை இன்பத்தமிழ்
கலையை பேரழாக்கி நடைபோடும் வசீகர குரலோனுக்கு
வளம் யாவும் சூழவும் – நாளைய வரலாறாகவும்
இந்த அண்ணனின் வாழ்த்துக்கள்![]()
பெரும் புதையல் இவன்
பெரும் விதையல் இவன்
அழகிசை குரலின் கானம் இவன்
அகிலம் நாளை போற்றும்
காலம் இவன்![]()
