சட்டம் அனைவருக்கும் சமமாகவே நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
“திருட வேண்டாம் என்று அவர்களை முன்கூட்டியே தந்தை எச்சரித்து இருக்கவேண்டும். இப்போது அழுவதால் பயனில்லை. தாயாக இருந்தாலும், பாட்டியாக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் பொருந்தும். பொது மக்களின் பணத்தைத் திருடிய எவருக்கும் எங்களுக்கு அனுதாபம் இல்லை.” என இலங்கையின் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியையும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்கள் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க ஒன்றுகூடியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியதுடன், அவ்விடத்திற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சென்றால் பலரை ஒரே இடத்தில் கைது செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
