பொலன்னறுவை, தமன்கடுவை பகுதியில் வீட்டில் சேகரிப்பட்ட கழிவுப்பொருள்களைப் பெற்றோல் ஊற்றி எரிக்க முயன்றபோது ஏற்பட்ட தீ விபத்தில் 21 வயதுடைய இளம் யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் இத்தீ விபத்தில் யுவதியின் பெற்றோர் சிறிய தீக்காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
