அமெரிக்காவுடன் முடிவில்லாத போரையோ நீண்டகாலப் பேச்சுவார்த்தைகளையோ ஈரான் விரும்பவில்லை எனவும் மற்றும் நியாயமான கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்கும் வரை தொடர்ந்து போரிடும் எனவும் நாடாளுமன்றச் சபாநாயகர் மொஹம்மத் பாகர் கலிபாஃப் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் போர்க்கள பலத்தை ராஜதந்திர வெற்றியாக மாற்றவே பேச்சுவார்த்தை என்றும் மற்றும் தடைகளுக்கு மத்தியில் ஈரான் உறுதியுடன் இயங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
