திருகோணமலை தம்பலகாமம், மீரா நகர் 98 அரபா நகரிலிருந்து கிண்ணியா செல்லும் ஆட்டுப்பட்டி பாலவீதி குன்றும் குழியுமாகக் காணப்படுவதால் பொதுமக்கள் போக்குவரத்து அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் கிண்ணியா செல்லப் பலரும் பயன்படுத்தும் இவ்வீதியை விரைவாகப் புனரமைத்துத் தருமாறு தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
