பூரணை தினமான இன்று யாழ்ப்பாணம் – தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான மக்கள் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணச் செய்திகள்
ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கு முந்தைய நாள் மாலையும் பௌர்ணமி தினத்தில் காலையில் இருந்து மாலை வரையும் போராட்டம் முன்னெடுக்கப்படுவது வழமையாகும்.
போராட்டக்காரர்கள் ”தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்று”, “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம்“, “கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை உடனே நிறுத்து“ போன்ற வாசகங்கள் ஏந்திய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று இடம்பெற்ற போராட்டத்தில் வழமை போன்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், காணி உரிமையாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்த நிலையில் இன்றும் போராட்டம் தொடர்ந்திருந்தது.
பூரணை தினமான இன்றைய தினம் தென்னிலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான சிங்கள யாத்திரிகர்கள் விகாரைக்கு வழிபாட்டிற்கென வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
