முற்றுமுழுதாக ஈழத்துக்கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ‘வீரம் உடையாது‘ திரைப்படம் நாளை (23) வெளியாகின்றது.
கர்ணன் படைப்பகம் தயாரிப்பிலும் எஸ்.விண்ணிதன் இயக்கத்திலும் உருவாகியுள்ள இந்தப்படத்தில் சபேசன் சண்முகநாதன், எழிலிசா, ஊரெழு பகி, கீர்த்தி, ஜொனி அன்டன், பிரசன்னா, தேனுசன், ஜூட் கொலின்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
நெவில் ஒளிப்பதிவினை மேற்கொண்டிருப்பதுடன், நிவேன் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். பிரசாந்த் கிருஸ்ணபிள்ளை இசையமைத்துள்ளார்.
யாழ். ராஜா திரையரங்கில் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு முதல் திரையிடல் இடம்பெறுவதுடன், நாளை மறுதினம் (24) பிற்பகல் 4.00 மணிக்கு இரண்டாவது திரையிடல் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணத்திரையிடலைத் தொடர்ந்து இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் ‘வீரம் உடையாது‘ திரைப்படத்தை திரையிட படக்குழு தயாராகி வருகின்றது
