நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தின் முஸ்டாங் மாவட்டத்தில் ஒரு பெரிய மலைப்பகுதி நொடிகளில் சரிந்து ஆற்றில் விழுந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள லெய்டே அருகே ஒரு பெரிய மலைப்பகுதி வெறும் ஆறு வினாடிகளில் காளி கண்டகி ஆற்றில் சரிந்தது.
