மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி நாளையதினம் பண்ணைப்பகுதியில் மெழுகுவர்த்தி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாண பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் நாளை மாலை ஐந்து மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு அனோஜனின் விடுதலைக்கு ஆதரவுக்கரம் நீட்டுமாறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
