விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மானை பிரித்து, ஜனநாயக நீரோட்டத்திற்குள் கொண்டு வந்தேன். புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உண்மையைச் சொன்னால், விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான் தான்.
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா அம்மானை பிரித்து, ஜனநாயக நீரோட்டத்திற்குள் கொண்டு வந்தேன். நான் தான் விடுதலைப் புலிகள் அமைப்பை இரண்டாகப் பிளவுபடுத்தினேன்.
மறுபுறம் சந்திரிக்கா, கருணாவைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியதுடன், இவர்கள் அனைவரையும் பயன்படுத்தி இறுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பை மகிந்த ராஜபக்ச அழித்தார்.
நாட்டில் கொடூர யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருந்த வேளையில், ஜே.வி.பி அமைப்பானது விடுதலைப் புலிகளுக்கு நிகராக மகா சங்கத்தினரையும் இராணுவத்தினரையும் கொன்றுகுவித்தது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
