விளையாட்டை மையப்படுத்தி இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘போராட்டம்’. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தொழிலதிபரும் தயாரிப்பாளருமான கரண் கந்தையா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ராஜ் சிவராஜ் அவர்களின் இயக்கத்தில், இசையமைப்பாளர் பூவன் மதீசன் அவர்களின் இசையில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ரீகன் கந்தையா நடித்துள்ளதுடன், Zee Tamil தொலைக்காட்சியின் ‘மகாநடிகை’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை நிவேதிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் இடம்பெறும் ‘முட்டக் கண்ணைக் காட்டி என்னைப் பத்து வச்சா’ என்ற பாடலை நான் எழுதியிருக்கிறேன். இப்பாடல் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
நாளை நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழாவில் நானும் கலந்து சிறப்பிக்கின்றேன்.
இந்த அன்பான அழைப்பை வழங்கிய தயாரிப்பாளர் அண்ணன் கரண் கந்தையா அவர்களுக்கும், இயக்குநர் ராஜ் சிவராஜ் அவர்களுக்கும், இசையமைப்பாளர் பூவன் மதீசன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
