தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பொது நோக்கத்திற்காக குறைந்தபட்ச அடிப்படையிலே 6 தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் இணைந்து ஒரு மேடை அமைத்து அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் ஏனைய தலைமைகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளையும் எதிர்பார்ப்புக்களையும் ஒரே இலங்கைக்குள் பெறுவதற்கான சாத்தியப்பாடுகளை அணுகும் முகமாக தான் இந்த மேடை அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
