ஜனாதிபதி பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்தும் மக்களின் காணி மக்களுக்கே .. என்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என கண்டித்தும், தமது காணிகளை விடுவிக்கக்கோரியும் வலி. வடக்கு மக்கள் பலாலி சந்தியிலும் மற்றும் வசாவிளான் சந்தியிலும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தி மற்றும் வாசாவிளான் சந்தி ஆகிய இருவேறு இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .
