ஈரான் மீதான தாக்குதல்களுக்குத் துணைபுரியும் AI மற்றும் தரவு மையங்களுக்கு நிதி, நிலம் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட எந்த வளங்களையும் வழங்கக் கூடாது என வளைகுடா நாடுகளுக்கு ஈரானிய சபாநாயகர் மொஹம்மத் பாகர் கலிபாஃப் எச்சரித்துள்ளார். இந்தநிலையில் பிராந்தியத் தரவுகளைக் கண்காணிக்க விரைவில் பெர்சிய வளைகுடா தரவு அதிகாரசபை உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
