பிரான்ஸில் விலைவாசி உயர்வைக் கண்டித்துப் போராட்டம் தீவிர வன்முறையாக மாறியுள்ள நிலையில், ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் உரையாற்றவுள்ளார். வரலாற்று நகர மண்டபம் மற்றும் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டதில் கோடிக்கணக்கான யூரோ இழப்பு ஏற்பட்டுள்ளது. 2,000 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மக்ரோன் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
