கனடாவின் அல்பெர்ட்டா வெய்ன்ரைட் படைத்தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர். அமைதிக்காலத்தில் கனடிய இராணுவம் எதிர்கொண்ட மிக மோசமான துயரங்களில் இது ஒன்று எனப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தொடர்புகள் ஏதுமில்லை எனத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
