தம்புள்ள – ஹபரண பிரதான வீதியில் உள்ள பெல்வெஹெர பகுதியில் நேற்றையதினம்(18) நிகழ்ந்த ஒரு பயங்கரமான சாலை விபத்தில் தம்புள்ள தேசிய பாடசாலையின் அதிபர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் தம்புள்ள தேசிய பாடசாலையின் அதிபராக பணியாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜனக விஜேசிங்க என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
