“போராட்டம்” திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகள், தமிழர்கள் சொல்ல முடியாத வலியை காற்பந்தாட்டம் மூலம் கூற வருவது போன்று கதைக்களம் அமைந்துள்ளதாகவும், இதுபோன்ற திரைப்படங்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும் என்பதே தங்களின் ஆசை என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
“போராட்டம்” திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் நேற்று (27.09.2026) கிளிநொச்சியில் திரையிடப்பட்டது.ந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்வையிட்ட இலங்கைத் தமிழர்கள், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு திரைப்படத்தைப் பாராட்டியுள்ளனர்.
ஈழத்தமிழர்களின் ஆதரவுடன் திரையுலகில் தடம் பதிக்க வெளிவந்துள்ள “போராட்டம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 12ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமாக இடம்பெற்றுள்ளது.
‘போராட்டம்’ திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் பூவன் மதீசன் இசையமைத்துள்ளார். திரைப்படத்தை பாஸ்கரன் கந்தையா வழங்கியுள்ளதுடன், IBC Tamil Productions மற்றும் BlackBoard ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு பணிகளை முன்னெடுத்துள்ளன.
இவ்வாறு பிரமாண்டமாக உருவாகியுள்ள “போராட்டம்” திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், கிளிநொச்சியில் சிறப்புத் திரையிடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த பொதுமக்கள்,
“திரைப்படம் நாங்கள் எதிர்பார்த்ததைப் போன்று மிகவும் நன்றாக உள்ளது. வழக்கமாக இலங்கையர்கள் உருவாக்கும் திரைப்படங்களைப் போன்று அல்லாமல், தமிழ் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
