காலை சரியாக 10.00 மணி! யாழ்ப்பாண நூலக பொதுசன கேட்போர் கூடத்தில் பச்சிலைப் பள்ளி பிரதேச செயலாளர் திரு. த. ஜெயசீலன் அவர்களின் கம்பீரமான தலைமையில் நற்கவி 400 விழா கோலாகலமாக ஆரம்பமாகியது.
பிரதம விருந்தினர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஆங்கிலமொழி கல்வித்துறைப் பேராசிரியர் திரு ஸ்ரீ கணேசன் மற்றும் சிறப்பு அழைப்பாளர், சிறப்பு விருந்தினர், கௌரவ விருந்தினர்களுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு, குளிரூட்டப்பட்ட கேட்போர் கூடம் நோக்கி கம்பீரமாய் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தமிழ்த்தாய் வாழ்த்தினை யா /மருதனார் மடம் இராமநாதன் கல்லூரி பழைய மாணவிகளான சரணியா மற்றும் மதுசிகா பாடியதைத் தொடர்ந்து
மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம் என எந்த ஒரு குறையுமின்றி, தொகுப்பாளர்கள் நிகழ்வை மிகவும் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் கொண்டு சென்றனர்.
அதன் பின்னர் வரவேற்பு நடனம் சோமையா சுதர்சன் அவர்கள் வழங்கி சபையோரை மகிழ்வித்தார். அதனைத் தொடர்ந்து திரு த. ஜெயசீலன் அவர்கள் தலைமையுரையினை ஆற்றினார். மேலும்
விருந்தினர்களைப் பொன்னாடை போர்த்தி கௌரவித்த பின், அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது விழா.
*அடுத்து
“நற்கவி 400” நூலின் முதல் பிரதியை திரு, திருமதி கபிலேந்திரன் – பிரியதர்ஷினி தம்பதியினர் சிரித்த முகத்தோடு பெற்றுக்கொண்டனர்.
அதைப் பார்த்த உற்சாகத்தில் ஏனையோரும் கூடவே புத்தகத்தை ஆசையாகப் பெற்றுக்கொண்டனர் .
எந்தவித தொய்வுமின்றி, அரங்கம் அதிரும் கரகோஷங்களுடன் நிகழ்வு வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தது .
நற்கவி 400 புத்தகம் கையிலே கிடைத்ததும் அனைத்து கவிஞர்களதும் வாசகர்களதும் முகமும் பிரகாசம் அடைந்தது. அந்த நேரத்தில்தான் நான் எனது வெற்றியை உணர்ந்து கொண்டேன். அவர்கள் பக்கம் முழுவதையும் புரட்டி அனைத்து கவிஞர்களது கவிதைகளையும் வாசிக்க ஆரவாரப்பட்டுக் கொண்டிருந்தார்கள் பாருங்கள்.அந்த நேரத்தில்தான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
—இதுதான் உண்மையான ‘வாசகர் ஈடுபாடு’!
தொடர்ந்து வாழ்த்துப் பாக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உரைகள் என அரங்கம் கரகோஷிக்க கவிஞர்களுக்கான சான்றிதழ்களை பிரதமவிருந்தினர் நிகழ்வின் தலைவர் மற்றும் அகளங்கன் ஐயா ஆகியோர் வழங்கி வைத்தனர்.
அதன் பின்னர் பிரதம விருந்தினர் தனது உரையினில் விழா சிறப்பாக இருந்தது எனவும் தான் மிகையான மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறி எம்மையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திச் சென்றார்.
தொடர்ந்து அனுசரணையாளர் கௌரவிப்பும் நடைபெற்று..இடையே பாடலும் இசைக்கப்பட்டது.
இறுதியாக பிரியநிலா ஆகிய நான் ஏற்புரையும் நன்றியுரையும் வழங்கப்பட்டதுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
இந்த நிகழ்வின் மூலம் நான் உங்களுக்கு சொல்ல வருவது என்னவென்றால் ஒவ்வொரு கவிஞர்களையும் நாம் உற்சாகப்படுத்த என்றென்றும் வாழ்த்துவோமாக !
