“சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற WITFA-வின் 2-வது மாநாடு, இசை நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் விழாவில் பாடகி பிரியங்கா அவர்களுக்கு ‘யாழின் குரல்’ சிறப்புப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
.” சிறுவயதிலிருந்தே இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் பாடகி பிரியங்கா. தனது இளமைப் பருவத்திலேயே இயல்பான இசைத் திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இவர், ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அரிய திறமையால் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் அன்பையும் பாராட்டையும் பெற்றார்.
அதன்பின்னர், பல மேடைச் கச்சேரிகளிலும், ஜெர்மனியில் நடைபெற்ற ‘வணக்கம் ஐரோப்பா’ நிகழ்விலும், ‘எம்வர் இசை’ அமைப்பிலும் பல பாடல்களைப் பாடியும் தனக்கெனத் தனி முத்திரையைப் பதித்தார்.
சமீபத்தில் “சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற WITFA-வின் 2-வது மாநாடு, இசை நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் விழாவில் பாடகி பிரியங்கா ‘யாழின் குரல்’ நிகழ்வில் கலந்து கொண்டு தனது இனிமையான குரலாலும் திறமையாலும் மக்களை மெய்சிலிர்க்க வைத்தார். அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரபல திரைப்பட இயக்குநர் சேரன் அவர்களின் கரங்களால், பாடகி பிரியங்காவிற்கு ‘யாழின் குரல்’ என்ற சிறப்புப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இவரது கலைப்பயணமும் இசைச் சேவையும் இன்னும் பல உயரங்களைத் தொட்டு மிளிர வாழ்த்துகிறோம்!
வாழ்த்துகளுடன்:
ஈழத்தமிழன் இணைய நிர்வாகம் & STSதமிழ் தொலைக்காட்சி நிர்வாகம்
