இலங்கையை முழுமையான டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றும் பயணத்தில் ஒரு முக்கிய வரலாற்றுச் சாதனையாக, உலகின் முன்னணி ஆன்லைன் கட்டண தளமான PayPal, நாட்டின் உள்நாட்டு வங்கி அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டு இன்று (மே 15) அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று இந்தச் சேவையின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. முதற்கட்டமாக இலங்கை வங்கி கொமர்ஷல் வங்கி மற்றும் சம்பத் வங்கி ஆகிய முக்கிய வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியும்.
எதிர்வரும் மாதங்களில் ஏனைய பல உள்நாட்டு வங்கிகளும் இந்த ஒருங்கிணைப்பில் இணையவுள்ளன.
இந்த முயற்சியானது இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை உலகளாவிய மட்டத்தில் கொண்டு செல்வதற்கும், சர்வதேச ரீதியிலான பணப் பரிமாற்றங்களை இலகுவாக்குவதற்கும் ஒரு மாற்றத்தக்க படியாக அமையும் என பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
