பிரான்ஸ் பரிஸில் குட்டி என்பவர் 30.05.2026 பி பகல் 14.15 காவல்துறையினரால் சுடப்பட்டு இறந்துள்ளார்
கத்திகளால் மக்களை மிரட்டி குத்திகாயப்படுத்தியதாகவும் காவல்துறை உடனே சரணடைய கூறியபோதும் மறுத்து மேலும் பலரை காயப்படுத்த முற்பட்டதினால் தொடர்ந்து காவல் துறையிரையும் மிரட்டினார் என்கிறது காவல்துறை
தாயகத்தில் மல்லாவியைச் சேர்ந்தவர் .
பிரான்ஸ், Bobigny பகுதியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈழத்தமிழ் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்த செய்தி பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் அளிக்கிறது. இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பால் தவிக்கும் அவரது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் குடும்பத்தினர் தரப்பில் மாறுபட்ட தகவல்கள் வெளிவருவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது குறித்த தெளிவையும்,
காவல்துறை தரப்பில், “அவர் கைகளில் கத்திகளுடன் தங்களைத் தாக்க முற்பட்டதால் தற்காப்பிற்காகச் சுட்டோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உயிரிழந்தவரின் மனைவி, “அவர் காவல்துறையினரைத் தாக்கவில்லை, அவர்களுடன் வாக்குவாதத்தில் மட்டுமே ஈடுபட்டார்” என மிகத் தெளிவாகக் கூறுகிறார்.
இங்கு எழும் மிக முக்கியமானதும், தவிர்க்க முடியாததுமான கேள்வி: ஒருவரைச் செயலிழக்கச் செய்ய வேண்டும் என்றால், ஏன் காலில் சுட்டு கட்டுப்படுத்தக் கூடாது? ஏன் நேரடியாக நெஞ்சிலோ அல்லது வயிற்றிலோ சுட்டு உயிரைப் பறிக்க வேண்டும்? இந்தச் செயல் காவல்துறையின் அதிகார வரம்பையும், அவர்கள் பயன்படுத்திய வன்முறையின் அளவையும் (Proportionality of force) பெரும் கேள்விக்குள்ளாக்குகிறது.
