லெபனானில் உள்ள ஐ.நா.வின் அமைதி காக்கும் பணிப் படையான யூனிஃபில் (UNIFIL) வீரர் ஒருவர் , நாட்டின் தென்கிழக்கில் உள்ள மர்ஜாயூன் அருகே அவரது நிலை மீது விழுந்த மோட்டார் குண்டுகளால் காயமடைந்த பின்னர், வியாழக்கிழமை உயிரிழந்ததாக அப்படை தெரிவித்துள்ளது.
புதன்கிழமை இரவு தாமதமாக நடந்த தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பதை யூனிஃபில் தெரிவிக்கவில்லை.
மேலும் இரண்டு அமைதிப்படை வீரர்கள் காயமடைந்ததாகவும், இச்சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்தது.
