தந்தையை படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை பகுதியை சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால (வயது 88) என்பவரே கொலையானவராவர்.
குறித்த முதியவரின் சடலம் அவரது வீட்டு முற்றத்தில் உடலில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு , படுகாயங்களுடன் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த தங்காலை பொலிஸார் , முதியவரின் இளைய மகனான ஓய்வு பெற்ற கடற்படை வீரரை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் கைது செய்யப்படும் போது, அதீத போதையில் காணப்பட்டதாகவும் , கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
