நியூசிலாந்து அரசியலில் இலங்கை வம்சாவளியினரின் செல்வாக்கை புதிய உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளவர் வானுஷி வால்டர்ஸ் (Vanushi Walters).
நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கை வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றவர்.
2000 ஆம் ஆண்டு கன்னி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். அவர் பாராளுமன்றத்தில் சேலை அணிந்து தோன்றி கன்னியுரை ஆற்றினார். தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் முறையே வணக்கம், ஆயுபவன் என்று தெரிவித்தார்.
மனித உரிமைகள் உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் பொதுவானவை என்ற செய்தியை அதில் வலியுறுத்தினார். அந்த தருணம் நியூசிலாந்து பாராளுமன்ற வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகப் பார்க்கப்பட்டது.
இலங்கையின் பிரபல ஊடகவியலாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ரிச்சர்ட் டி சொய்சா, 1990 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை உரையில் நினைவு கூர்ந்தார். வானுஷிக்கு ரிச்சர்ட் டி சொய்சா தந்தை வழி உறவினர்.
அந்தச் சம்பவத்தை அவருடைய தாயார் அவருக்கு கூறியபோது, அரசே சொந்த மக்களை சித்திரவதை செய்து கொல்லக் கூடாது என்ற ஆழ்ந்த கோபமும் வேதனையும் அவருக்குள் உருவானதாக தெரிவித்தார்.
அந்த அனுபவமே பின்னர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமை சட்டத் துறையில் பணியாற்றுவதற்கான உந்துசக்தியாக அமைந்தது என்றும் அவர் உருக்கமாக கூறினார்.
வானுஷி 2023 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அப்பர் ஹார்பர் (Upper Harbour) தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த போதிலும், முன்னாள் அமைச்சர் டேவிட் பார்க்கர் பதவி விலகியதைத் தொடர்ந்து, 2025 மே 12 இல் தொழிற்கட்சியின் லிஸ்ட் எம்.பி. (List MP) ஆக மீண்டும் பாராளுமன்றத்துக்குத் திரும்பினார்.
2026 மார்ச் 11 ஆம் திகதி தொழிற்கட்சித் தலைவர் கிறிஸ் ஹிப்கின்ஸ் மேற்கொண்ட நிழல் அமைச்சரவை மாற்றங்களின்போது, கட்சியின் முன்னிலைத் தரவரிசையில் 8 ஆவது இடத்துக்கு உயர்த்தப்பட்டார்.
அவருக்கு,
நிழல் அட்டர்னி ஜெனரல்
வெளிவிவகாரங்கள்
நியூசிலாந்து பாதுகாப்பு உளவுத்துறை (NZSIS)
அரசாங்க தொடர்பாடல் பாதுகாப்புப் பணியகம் (GCSB)
ஆகிய மிக முக்கியமான பொறுப்புகள் வழங்கப்பட்டன.
இதன் மூலம், நியூசிலாந்தின் தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் சட்ட விவகாரங்களில் தொழிற்கட்சியின் முக்கிய குரல்களில் ஒருவராக அவர் உருவெடுத்துள்ளார்.
அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பம்
வானுஷி வால்டர்ஸ் அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.
அவர்,
1931 ஆம் ஆண்டு இலங்கை அரச சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது பெண் உறுப்பினரான நெய்சம் சரவணமுத்து,
கொழும்பின் முதலாவது உள்நாட்டு மேயரான ரத்னசோதி சரவணமுத்து ஆகியோரின் கொள்ளுப் பேத்தியும் ஆவார்.
Weniger anzeigen
