முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற குடும்பத் தகராறு, இறுதியில் பேரதிர்ச்சியில் முடிந்துள்ளது.
ஆத்திரமடைந்த கணவன் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில், நான்கு பிள்ளைகளின் தாயார் படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ![]()
தாக்குதலை நடத்திய கணவனும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து புதுக்குடியிருப்பு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நான்கு பிள்ளைகளைத் தவிக்கவிட்டுச் சென்றுள்ள அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
