நல்லூரில் வைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் சிலையை அகற்றிய விடயத்தில் அரசாங்கத்திற்கு தொடர்பு இல்லை என்றால் தயவு செய்து எடுத்த சிலையை திருப்பி கொண்டு வந்து வைத்தால் பிரச்சினை முடிந்துவிட்டதாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி சில காரியங்களை திட்டமிட்டு செய்திருக்கிறது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
