வருடாந்தத் திருவிழா 2026
19.06.26 – 01.07.26
சிவனடியார்களே!
ஜேர்மன் நாட்டில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டதெனும் தனிச்சிறப்பைக் கொண்ட சைவ ஆலயமாக டோர்ட்முண்ட் மாநகரில் மௌலீசுவரம் எனப் பெயர் விளங்க வீற்றிருந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் உடனுறை சந்திரமௌலீசுவரர் ஆலயத்தின் 16 வது வருடாந்தத் திருவிழா நிகழும் மங்களகரமான பராபவ வருடம் ஆனித் திங்கள் 06ம் நாள் சனிக்கிழமை (20.06.26) மகம் நட்சத்திரமும் வளர்பிறை சஷ்டித் திதியும் சித்தயோகமும் கூடிய சுபவேளை 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆனித் திங்கள் 17ம் நாள் (01.07.26) புதன்கிழமை மாலை வைரவர்மடையுடன் இனிதே நிறைவுபெற எம்பெருமான் அருள்பாலித்துள்ளார். சிவனடியார்கள் அனைவரையும் திருவிழாக்களில் பங்குபற்றி இறையருள் பெற்றேகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
திருவிழா நிகழ்வுகளும் ~ உபயகாரர்கள் விபரமும்
- 19.06.26 வெள்ளிக்கிழமை மாலை விநாயகர் அபிஷேகத்தைத் தொடர்ந்து திருவிழா முன் நிகழ்வுகள் நடைபெறும்.
- திருமதி கீதா யோகேஸ்வரன்
- 20.06.26 சனிக்கிழமை.கொடியேற்றம்: காலை 08.30 மணிக்கு நடைபெறும் அபிஷேகத்தைத் தொடர்ந்து மதியம் 12.00 மணிக்கு கொடியேற்றம்.
- திரு திருமதி துரைராசசிங்கம் குடும்பத்தினர் திரு திருமதி இராசலிங்கம் குடும்பத்தினர்திரு திருமதி அன்னலிங்கம் குடும்பத்தினர்
- 21.06.26 ஞாயிற்றுக்கிழமை. 02ம் திருவிழா குதிரைவாகனத் திருவிழா.
- திருமதி கஜேந்திரன் குடும்பத்தினர் திரு திருமதி துரிந்தன் குடும்பத்தினர்திரு திருமதி சிவக்கண்ணன் குடும்பத்தினர்
- திருமதி கௌரீஸ்வரன் குடும்பத்தினர் திரு திருமதி உதயரூபன் குடும்பத்தினர் திரு திருமதி நிரோசன் குடும்பத்தினர்
- 22.06.26 திங்கட்கிழமை 03ம் திருவிழா பிச்சாடனத் திருவிழா
- திரு திருமதி முனிஸ்வரகாந்தன் குடும்பத்தினர்
- 23.06.26 செவ்வாய்க்கிழமை. 04ம் திருவிழா நாயன்மார்கள் திருவிழா
- காலை: திரு திருமதி பரமானந்தன் குடும்பத்தினர் திரு திருமதி சிவானந்தன் குடும்பத்தினர்
- திரு திருமதி சரவணன் சாவித்திரி குடும்பத்தினர்
- மாலை: திரு திருமதி சிவாஸ் குடும்பத்தினர்
- 24.06.26 புதன்கிழமை. 05ம் திருவிழா திருநடைத் திருவிழா
- கோண்டாவில் மக்கள்
- 25.06.26 வியாழக்கிழமை. 06ம் திருவிழா மாம்பழத் திருவிழா
- திரு திருமதி குகப்பிரகாஸ் குடும்பத்தினர்
- 26.06.26 வெள்ளிக்கிழமை 07ம் திருவிழா வேட்டைத் திருவிழா
- திருமதி ஜெகநாதன் குடும்பத்தினர் திரு திருமதி சிவபாதசுந்தரம் குடும்பத்தினர் திரு திருமதி ஸ்ரீநிவாசன் குடும்பத்தினர்
- திரு ஸ்ரீகந்தராசா குடும்பத்தினர் திருமதி சத்திவேல் குடும்பத்தினர்
- 27.06.26 சனிக்கிழமை 08ம் திருவிழா சப்பரத் திருவிழா
- திரு திருமதி ஜெயக்குமார் குடும்பம் இளந்தளிர் விளையாட்டுக் கழகம்
- 28.06.26 ஞாயிற்றுக்கிழமை. தேர்த்திருவிழா: மதியம் 12.00 மணிக்கு இரதபவணி ஆரம்பம். மாலை 04.00 மணிக்கு பச்சைச்சாற்றல் (பொதுமக்கள்)
- 29.06.26 திங்கட்கிழமை. தீர்த்தத் திருவிழா. காலை தீர்த்தம்.
- திருமதி திருச்செல்வம் குடும்பத்தினர்திரு திருமதி அமுதலீங்கம் குடும்பத்தினர்திரு திருமதி சசிகுமார் குடும்பத்தினர்திரு ஸ்ரீதரன் குடும்பத்தினர்
- மாலை கொடியிறக்கம் சண்டேசுவரர் உற்சவம் ஆச்சார்யார் உற்சவம்
- திரு திருமதி மகேஸ்வரன் குடும்பம்
- 30.06.26 செவ்வாய்க்கிழமை பூங்காவனம் திருக்கல்யாணம். காலை 08.00 மணிக்கு பிராயச்சித்த அபிஷேகத்துடன் சிறப்புப்பூஜை
- மாலை 16.00 மணிக்கு பூங்காவனம் திருக்கல்யாணம் திருவுஞ்சல் சுவாமி உள்வீதி வலம்.
- திரு திருமதி கணேசலிங்கம் குடும்பத்தினர்
- 01.07.26 புதன்கிழமை வைரவர் மடை. மாலை 16.00 மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் ஆரம்பமாகும்
- திருமதி றொமேஸ் குடும்பத்தினர்
குறிப்பு – பகல் திருவிழாவும காலை 08.30 மணிக்கும் மாலை நேரத் திருவிழா மாலை 04.30 மணிக்கும் ஆரம்பமாகும்.
- 22.06.26 திங்கட்கிழமை காலை ஆனி உத்திறம். நட்சேத்ர அபிசேகம் – உபயம் திருமதி மோகனதாஸ்
- 27.06.26 சனிப்பிரதோச விரதப் பூசை மாலை 04.30 மணிக்கு ஆரம்பமாகும்.
திருவிழா சிவாச்சாரியார்கள்
- உற்சவகுருவும் ஆலய குருவும்: சிவாகமகிரியாபூஷணரத்தினஜோதி சிவஸ்ரீ.சாமி.தெய்வேந்திரக்குருக்கள்
- சாதகாச்சார்யார்கள்: சர்வசாதக பிரகீர்த்தி சிவஸ்ரீ ந.பிரசாதக் குருக்கள் (இலங்கை)
- உதவிக் குரு: சிவஸ்ரீ சந்திரசேகர இரவீந்திரநாதக் குருக்கள். கம் சித்தி பிள்ளையார் கோவில் ஆலயகுரு
உற்சவச் சிறப்புக் குருமார்ட்:
- சிவஸ்ரீ சிவகுக வசந்தன் குருக்கள் (பிரதமகுருக்கள் ஸ்ரீ முத்துக்குமாரசாமி ஆலயம். முல்கை). பிரமஸ்ரீ சோமாஸ் ஸ்ரீகாந்த சர்மா லூடன்செய்ட்
மங்கள வாத்தியம்:
- தவில்ஞானச் சுடரொளி பரமு செல்வநாயகம் நாதசுவரமதுரகானமணி குமரகுரு பாலமுரளி குழுவினர்
மேலதிகத் தொடர்புகளுக்கு : 00491732774153. 00491792432781
இவ்வண்ணம் ஆலயபரிபாலன சபை
அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் உடனுறை சந்திரமௌலீசுவரர் ஆலயம்
Sivan Tempel Dortmund e.V. Kiefer str 24, 44225 Dortmund (Hombruch) T.P – 0231 72515165, Fax- 0231 72515166, மின்னஞ்சல்: info@sivantempel-dortmund.de, 📱 004915202525243
