இலங்கை கடற்படையின் 27-வது தளபதியாகப் பதவியேற்றுள்ள வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இன்று (2026 ஜூலை 10) கண்டியில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் முதலில் மல்வத்து மகா விஹாரைக்குச் சென்ற தளபதி, மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய திப்பொட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கலாபிதான தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார். அதனைத் தொடர்ந்து, அஸ்கிரிய மகா விஹாரையில் மகாநாயக்க அதிவணக்கத்திற்குரிய வரகாகொட தம்மசித்தி ஸ்ரீ பஞ்ஞாநந்த ஞானரதனாபிதான தேரரைச் சந்தித்து வணங்கி, ஆசிகளையும் அறிவுரைகளையும் பெற்றுக்கொண்டார்.
Beaches & Islands
இந்நிகழ்வில் கடற்படைச் செயலாளர், தளபதியின் செயலாளர் கொமதோரு குமார முணசிங்க, இலங்கை கடற்படை கப்பல் கட்டும் நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கெப்டன் ஹேமந்த ரணசிங்க உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
