இலங்கை மெய்வல்லுநர் விளையாட்டு நிர்வாகம் மற்றும் தேர்வு முறைகளில் நிலவும் சிக்கல்கள் காரணமாக, அதன் தெரிவுக் குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாகத் தமது பதவிகளிலிருந்து விலக முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான உத்தியோகபூர்வக் கடிதத்தை அவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளனர்.
விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் உதவிப் பணிப்பாளர் D.A. தயாரத்ன, முன்னாள் தேசிய மெய்வல்லுநர் சாதனையாளர்களான கேணல் M.K.P. ஜயசேகர மற்றும் ரவி வித்யாலங்கார ஆகிய உயர்மட்ட உறுப்பினர்களே இப்பதவி விலகல் முடிவை எடுத்துள்ளனர்.
