காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, இந்தக் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும் என்பதால், மறு அறிவிப்பு வரும் வரை கடற்படை மற்றும் மீனவத் தரப்பினர் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொள்கிறது.
