Dr. ஐங்கரன் விக்னேஸ்வரன் அவர்கள் எழுதிய நான்கு நூல்களின் வெளியீட்டு விழா, கடந்த சனிக்கிழமை மாலை இலண்டனில் அரங்கம் நிறைந்த மக்களின் பேராதரவுடனும் அன்புடனும் இனிதே நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க படைப்புகளை வாழ்த்தி உரையாற்றவும், முதல் பிரதிகளைப் பெற்றுக்கொள்ளவும் கிடைத்த சந்தர்ப்பத்திற்காக பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
14 வயதிலேயே தன் தாய் மண்ணுக்காக எழுதத் தொடங்கியவன்…
இன்று, நாற்பது ஆண்டுகளைக் கடந்த தனது எழுத்துப் பயணத்தில், ஒரு தனிமனிதனாக மட்டுமல்லாது, ஒரு சமூகத்தின் நினைவுகளையும், வரலாற்றையும், விடுதலைக்கான போராட்டங்களையும் பதிவு செய்யும் படைப்பாளியாக உயர்ந்து நிற்கிறான்.
ஆறு கண்டங்களில் — கண்டங்கள் ஐந்து மட்டுமல்ல! — நிகழ்ந்ததும், இன்றும் நிகழ்ந்துகொண்டிருக்கும் பல்வேறு விடுதலைப் போராட்டங்களைத் தேடித் திரிந்து, ஆராய்ந்து, வரலாற்றுத் தகவல்களைத் தொகுத்து இந்நான்கு நூல்களையும் உருவாக்கியிருக்கிறான்.
இவை வெறுமனே படித்துவிட்டு மறந்துவிடும் நூல்கள் அல்ல.
வரலாற்றைத் தேடுபவர்களுக்கும், அறிய விரும்புபவர்களுக்கும், அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாக்க விரும்புபவர்களுக்கும் இவை அரிய ஆவணங்கள்.
ஒரு தலைமுறை அனுபவித்ததை அடுத்த தலைமுறை அறிய வேண்டும்.
ஒரு காலத்தின் போராட்டங்கள் மறக்கப்படாமல் வரலாற்றில் பதிய வேண்டும். அதற்கான ஒரு முக்கியமான முயற்சியாகவே இந்நூல்களை நான் பார்க்கிறேன்.
அனைவரும் இந்நூல்களை வாங்கிப் படியுங்கள். பாதுகாத்து வையுங்கள். அடுத்த தலைமுறைக்கும் கொடுங்கள்.
என் அன்பு நண்பன் Dr. ஐங்கரன் விக்னேஸ்வரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். ![]()
எழுத்துக்கள் தொடரட்டும்…
ஆவணங்கள் பெருகட்டும்…
வரலாறு மறக்கப்படாமல் தலைமுறைகள் கடந்து பயணிக்கட்டும்!
