உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாக கைதாகலாமென தெரியவந்துள்ளது.
இதனிடையே கட்சியினரே டக்ளஸை சிக்க வைப்பதாக உள்ளக மோதல்கள் மூண்டுள்ளது.
நேற்றைய நீதிமன்ற விசாரணையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் டக்ளஸ் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
விசாரணையில் பல நபர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் முன்னாள் அமைச்சரான கதிரவேலு நிதியானந்த தேவாநந்தா எனப்படும் டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்தும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான அசாத் மௌலானாவை கருணா மற்றும் பிள்ளையானுக்கு அறிமுகப்படுத்தியது டக்ளஸ் தேவானந்தா என வெளிப்பட்டமையாகும்.
முந்திரி கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த சங்கர் என்பவரிடம், அசாத் மௌலானாவை கருணா மற்றும் பிள்ளையானுக்குச் சந்திக்க வைக்குமாறு அவர் வழிகாட்டியுள்ளார்.
எனினும் டக்ளஸ் தேவாநந்தா அதனை மறுக்கிறார். வாக்குமூலத்தைப் பெற்ற பின்னர் அவர் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துகிறார். அங்கேயும்; பெற்ற வாக்குமூலங்கள் தொடர்பாகக் குறிப்பிடுகிறார். அடுத்ததாக சங்கர் என்பவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இவர் மிகவும் முக்கியமான சாட்சி. இவரே டக்ளஸ் தேவாநந்தாவின் அரசியல் பிரிவின் முன்னாள் பிரதானியாவார்.
அசாத் மௌலானாவை கருணா குழுவுடன் இணைக்குமாறு அறிவுறுத்தியது டக்ளஸ் தேவாநந்தா என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். பிள்ளையானுடன் அசாத் மௌலானா தொடர்புகளைப் பேணியுள்ளார்.
ஆசாத் மௌலானாவிற்கு பாய்யான வாக்குமூலம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் 2005, 2006 காலப்பகுதியிலேயே அசாத் மௌலானாவுக்கு அரசியல் புகலிடம் கிடைத்துவிட்டது” .
இந்நிலையிலேயே ஆசாத் மௌலானாவிற்கு அரசியல் தஞ்சம் கோர பொய்யான வாக்குமூலமளிக்கவேண்டிய தேவையில்லையென சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது.
