எங்கள் மண்ணின் மூத்த கீற்றார் வாத்தியக் கலைஞர்
டனியல் அமல்ராஜ் அண்ணா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
எங்கள் மண்ணின் கலைப் பாரம்பரியத்தைத் தனது இசையால் காத்து நிற்கும் கலைஞராகவும், பல தலைமுறைகளின் இதயங்களைத் தனது இசையால் வசப்படுத்திய மூத்த கலைஞராகவும் திகழும் அன்புக்குரிய டனியல் அமல்ராஜ் அண்ணா அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
“இசையால் வசமாகும் இதயம்;
இனிமையால் ஆறுதல் பெறும் உயிர்.”
உங்கள் கீற்றார் இசையின் ஒவ்வொரு நாதமும் எங்கள் மண்ணின் பெருமையும் எங்கள் மக்களின் உணர்வுகளையும் சுமந்து செல்கிறது. அந்த இசை பலரின் உள்ளங்களுக்கு மகிழ்ச்சியாகவும், துயரங்களுக்கு மருந்தாகவும், வாழ்வுக்கு நம்பிக்கையாகவும் அமையட்டும்.
எங்கள் மண் போற்றும் கலைஞனாக நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் சிறந்து விளங்கவும், உங்கள் கலைப்பயணம் எண்ணற்ற சாதனைகளைப் படைக்கவும், உங்கள் இசை அடுத்த தலைமுறைகளுக்கும் வழிகாட்டியாகத் திகழவும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
கலை வாழ்க!
இசை வாழ்க!
கலைஞர் டனியல் அமல்ராஜ் அவர்களின் புகழ் என்றும் நிலைக்கட்டும்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா!
அன்புடன்,
கலைஞர் குமாரு யோகேஸ்வரன்
