யுத்தம் முடிவுக்கு வந்து 17வருடங்கள் கடந்துள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் இலங்கை இராணுவம் பாரிய ஒத்திகை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
நேற்றைய தினமான வியாழக்கிழமை முதல் 26ம் திகதி திங்கட்கிழமை வரை யானைளை தடுக்கும் மின்சாரவேலிகளை பயிற்சி நடவடிக்கைகாக தடைசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளார்கள்.
தீவுகள் ஆராயுங்கள்
விசேட அறிவித்தல் மூலம் அந்த பிரதேசத்தில் இராணுவத்தின் பயிற்சி நடைபெறுவதாக குறிப்பிட்டு அறிவிப்பு இராணுவ முகாமிற்கு அருகில் ஒட்டப்பட்டுள்ளது.
இதனிடையே முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் இரவு நேரங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையிலேயே பயிற்சி நடவடிக்கையென தெரிவித்து, அப்பகுதியில் மின்சார வேலி அமைத்துப் பயன்படுத்துவதற்கு இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர்.
காட்டுயானைகளின் தொல்லையால் பொதுமக்கள் தமது உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதால் மக்கள் மத்தியில் சூஅச்சநிலை அதிகரித்துள்ளது.
கடந்த 20ம் திகதி யானை தாக்குதலில் 73 அகவையுடை வயோதிபரான செல்லத்துரை கணபதிப்பிள்ளை என்பவர் உயிரிழந்துள்ளார் அவரின் இறுதி நிகழ்வு நேற்;று (22) நடைபெற்றுள்ளது .
ஆலங்குளம் கொக்காவில் வீதியில் மாலை 5.00 மணிக்கு பின்னர் மக்களின் வீதியில் செல்லமுடியாத நிலை காணப்படுகின்றது யானைகள் ஊர்மனைகளுக்குள் வந்துவிடுகின்றன.
அதனைவிட குறித்த உயிரிழந்தவரின் காணிக்குள் இரண்டாவது முறையாகவும் இரவு யானை புகுந்துள்ளது.
இவ்வாறான சூழலில், யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் குடியிருப்புப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கும் மின்சார வேலி முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகக் கருதப்படும் நிலையில், அதனைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் இராணுவம் அறிவித்துள்ளது.
