புதுக்குடியிருப்பு: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் திரு முல்லை யோகா நிலையம் (யோகா அறக்கட்டளை) ஆகியன இணைந்து நடத்திய “திறந்த வட்ட யோகாப் போட்டி”யில் வெற்றியீட்டியவர்களைக் கௌரவிக்கும் விசேட மதிப்பளிப்பு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இன்று, 11.07.2026 (சனிக்கிழமை) முற்பகல் 09.00 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு இனிதே ஆரம்பமானது.
மாலை அணிவித்து, சிறப்பான வரவேற்புடன் அழைத்து வரப்பட்ட விருந்தினர்கள் முன்னிலையில் மங்கல விளக்கேற்றலுடன் விழாத் தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து, விழாவை மேலும் மெருகூட்டும் வகையில் பல சிறப்பான கலை நிகழ்வுகளும் அரங்கேறின.
யோகா போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியீட்டிய பலருக்கு கௌரவங்களும், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. பலரை கௌரவிக்கும் ஒரு உன்னத நிகழ்வாகவும், யோகா கலையை ஊக்குவிக்கும் ஒரு சிறப்பான விழாவாகவும் இந்நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
