யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு குப்பிளான் பகுதியில் இரட்டைச் சகோதரிகள் தமக்குத் தாமே தீ மூட்டி உயிரிழந்த சோகச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.
கடும் தீக்காயங்களுக்கு உள்ளான இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இருவரும் உயிரிழந்துள்ளனர்.
வாழ்வதற்கு விருப்பமில்லாத காரணத்தினாலேயே தாம் இந்த முடிவை எடுத்ததாக உயிரிழந்த சகோதரிகள் மரணமடைவதற்கு முன்னர் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
