கடந்த 5,6,மற்றும்7.05.2026 ஆகிய திகதிகளில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமானது வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் இருந்து சுமார் 20 பேரளவிலான கானாமல்போனோர் மற்றும் கானாமல் ஆக்கப்பட்டோருக்கானகலந்துரையாடலொன்றினை கொழும்பில் உள்ள ரெடிஷன் விருந்தினர் விடுதியில் பூட்டிய அறையினுல் நடாத்தியுள்ளது.
இதுபற்றி மேலும் தெரிய வருவதாவது, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமானது இனிவரும் காலங்களில் நேரடியாக கானாமல் போனோருடன் வேலை செய்யாது எனவும் பின்புல உதவிகளான நிதி அணுசரனையா ளர்களாக மட்டும்தான் செயற்படுவோம் என கூறியதுடன் ஏனைய வேலைகளான
ஒருங்கிணைப்பு பணிகள்,
சிறிலங்காவின் நீதியமைச்சரருடனான சந்திப்புக்கள், ஜனாதிபதியுடனான சந்திப்புக்கள், மற்றும்
கானாமல் போனோர் அலுவலகத்துடனான சந்திப்புக்கள் என அனைத்தும் இலங்கையின் முழுவதிலும் தனது கிளைகளைக் கொண்டுள்ள சர்வோதம் என்ற நிறுவணமே பொறுப் பாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்ட வேலைகளை தாம் வடக்கு மாகாணத்துடன் இணைத்து செயற்பட எண்ணுவதாகவும் அச் செயற்பாடுகள் வெற்யளிக்கும் பட்சத்தில் கிழக்கையும் இணைத்துச் செயற்படலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ள தாக நம்பத் தகுந்த வட்டாரங்களின் மூலம் அறியக்கிடைத்துள்ளது
இதற்கு வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அணைத்து கானாமல் ஆக்கப்பட்டோரும்{அவர்கள் பாசையில் காணாமல் போனோர்} ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப் பட்டனர்.
அக்கோரிக்கைக்கு வடக்கு கிழக்கில் இருந்து சென்ற தங்களைக் கானாமல் ஆக்கப்பட்டோர் என கூறும் பெண்மணிகளில் சிலரும் தமது பூரண ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.
அரசியல் ரீதியில் ஒற்றையாட்சிக்குள் மற்றும் உள்ளக பொறிமுறைகளுக்குள் இவ் விடயங்களை கையாள துடிக்கும் ஆட்சியாளர்களுக்கு மேலும் வலுச் சேர்ப்பதுடன் பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக மாறியுள்ளது.
நீண்ட காலமாக வடக்கு கிழக்கில் சர்வதேச நீதி வேண்டிப் போராடும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச நீதி கோரிய போராட்டமானது இம்மாதிரியான செயற்பாடுகளினால் வலு விழந்து போயிடுமோ என வடக்கு கிழக்கில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தின் உறவுகளில் சிலர் தமது கவலையைப் பகிர்ந்து கொண்டனர்.
வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப் படுத்தி நீண்ட காலமாக சர்வதேச நீதிவேண்டி போராடும் மக்களின் கோரிக்கையை செவி சாய்க்காத சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தங்களை நடு நிலையாளர்கள் என கூறிக்கொள்ளுவதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது. அத்துடன் இச் செயற்பாடுகள் எம்மை மிகவும் கவலை கொள்ள வைக்கின்றது.
வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் சர்வதேச சங்கம் மீது எமது மக்கள் அளப்பரிய நம்பிக்கையை வைத்திருந்தனர்.
அதற்கு காரணம் அவர்கள் யுத்தகால த்தில் மோதல்களால் பாதிக்கப்பட்ட இரு தரப்பினருக்கு மிடையில் ஆற்றிவந்த மனிதாபிமான செயற்பாடேயாகும்.
இவையெல்லாம் நீர்த்துப் போகும் வகையில் தற்காலச் செயற்பாடுகள் அமைகின்றன. ஒப்பிட்டுப் பார்க்கும் போது எமக்கு மிகுந்த ஏமாற்றத்தினைத் தருகின்றது.
முடிந்தவரை கானாமல் ஆக்கப்பட்டோர்,
காணாமல் போனோர் அனைவரைம் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதன் மூலம் உள்ளக பொறிமுறையை பலப்படுத்தி பொறுப்புக் கூறல் விடயங்களில் இருந்து அரசை காப்பாற்றுவதற்கு எடுக்கும் முயற்சியாகவே எம்மால் இதனைப் பார்க்கத் தோன்றுகின்றது.
அதற்கு ஒரு சில நாடுகளும் நிதியுதவி அணுசரணைகளை வழங்குவதன் மூலம் இறுதிக்கால யுத்தம் வரைக்கும் முள்ளிவாய்க்கால் வரை எப்படி சில சர்வதேச நாடுகள் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு துணை நின்றதோ அதே போன்றதொரு நிலைதான் மீண்டும் தோன்றியுள்ளது.
எனவே, பாதிக்கப்பட்டோருக்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டுமானால் நீதியின் பால் அக்கறையுடையோர்,புலம் பெயர்ந்து பெளிநா டுகளில் வாழும் ஈழத் தமிழர்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையுடன் இணைந்து பணியாற் றுவோர் அணைவரும் விழிப்புடன் செயற்பட்டு நீதி மறுக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு கானாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் நீதியான போராட்டம் எந்த வகையிலும் நீர்த்துப் போகாது அவர்களுக் கான சர்வதேச நீதி கோரிக்கையை வலுப் பெற வைப்பதனூடாக நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின் கீழ் கொண்டுவரப்பட்ட மீள நிகழாது என்ற உத்தரவாதத்திற்கு வலுச் சேர்க்க முடியும்.
அதன் மூலம் எதிர்கால த்தில் இம்மாதிரியான சட்டத்திற்குப் புறம்பான மனித கடத்தல்கள் ,மற்றும் தட்டிக் கழிக்கப்பட்டு வரும் பொறுப்புக் கூறலுக்கு உத்தரவாதமற்ற நிலையினை தடுத்து உண்மையான பொறுப்புக் கூறல் மற்றும் எல்லோருக்குமான பாதுகாப்பு, நல்லிணக்கம், சமாதாணம் போன்ற விடயங்களில் இலங்கை முன்னேற்றத்தை கான முடியும்.
உள்ளக பொறிமுறையை நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் காணாமல் ஆக்கப்பட்டோரில் அதிகமானோர் அரச படையினராலையே கானாமல் ஆக்கப்பட் டுள்ளனர்.
அத்துடன் உள்நாட்டுப் பொறிமுறையினூடாக உருவாக்கப்பட்ட கானாமல் போனோருக்கான அலுவலகமானது அப்போதைய சூழ் நிலையில் சர்வதேசத்தின் நெருக்குவாரங்களுக்கு அமைவாக கொண்டு வரப்பட்டதே ஒரு ஏற்பாடே இந்த கானாமல்ப் போனோருக்கான அலுவலகம். {OMP}
இவ்வலுவலகத்தின் மூலம் நீதியைப் பெறுவதற்கான சட்ட ஏற்பாடுகள் போதாமல் இருப்பதனாலும் அத்துடன் கானாமல் ஆக்கியோர் {சம்மந்தப்பட்டோர் }அரச படையினராகவும் மற்றும் அந்தக் காலங்களில் சம்மந்தப் பட்ட விடயங்களுக்கு பொறுப்பாக இருந்த அரசியல் வாதிகளுமே காரணகர்தாக்கலாக உள்ளதனால் எமக்கு உள்ளக பொறிமுறையில் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை சிறிதளவும் இல்லை.
அத்துடன் ஐ.நா இலங்கைக்கான பொறுப்புக் கூறல் திட்டத்தின்{OSLAP}கீழ் இயங்கும் சாட்சியங்கள் சேகரிப்பு பொறிமுறையானது 2027 ம் ஆண்டுவரை நீடிக்கப்பட்டுள்ள சூழ் நிலையில் தங்களை நடுநிலையானவர்கள் என கூறிக்கொள்பவர்கள் மேற்படி வேலைத் திட்டங்களுக்கு உதவியக இருப்பதுதான்.நீதியை பெறுவதற்கான ஆரம்பக்கட்ட வேலையாக கூட இருக்கலாம்.அதை விடுத்து உள்ளக ரீதியில் ஒருங்கிணைத்து செயல்ப்படுவதானது. என்றும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத செயற்பாடாகும்.
இதில் மிக கவலையான விடயம் என்னவென்றால் எம்ம வர்களும் சேர்ந்து இந்த உள்ளக பொறி முறையிலான வேலைகளில் தெரிந்தோ தெரியாமலோ ஈடுபடுகிறார்கள் என்பது தற்சமயம் வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.
எனவே, சம்மந்தப்பட்ட தரப்பினர் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு துணை போகாது நீதியின்பால் ஒற்றுமையுடன் செயற்பட்டு சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு வலுச் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
மனித உரிமைச் செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதன்.
