யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி மிரட்டல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் கைத்துப்பாக்கி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளது.
City& Local Guides
அதேவேளை அருச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எதிர் தரப்பைச் சேர்ந்த குடும்பப்பெண் ஒருவரையும் பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற காணிப் பிணக்கின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு நீதிமன்று கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கியது:
மேலும் வழக்கின் எதிர் தரப்பினருடன் எவ்விதமான பேச்சுவார்த்தைகளோ அல்லது தொடர்புகளோ வைத்துக்கொள்ளக் கூடாது என நீதவான் கடுமையாக எச்சரித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தனது கைக்குழந்தையுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த ஏப்ரல் 25 ம் திகதி பெரியவிளான் காணிப் பிணக்கின் போது அருச்சுனா ராமநாதன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய காணொளி வெளியான நிலையில் அருச்சுனா இராமநாதன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.