நுவரெலியா – கொத்மலை கொட்டகபிட்டியவில் கெப் வாகனம் ஒன்று 500 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 54 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தநிலையில் காயமடைந்த 50 வயதுடைய பெண் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மீட்புப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டதுடன், கொத்மலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
