யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று புதன்கிழமை மூன்றாவது நாளாகத் தொடர்ந்த நிலையில், உடல்கள் எரிக்கப்பட்டதற்கான அடையாளமாக கரிய மணல் பிரதேசமொன்றும் இன்று கண்டறியப்பட்டுள்ளது.அதேவேளை புதிய எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்று வரும் அகழ்வுப் பணிகளின் இன்றைய தேடுதலின் போது சில புதிய எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது அவற்றைப் படிபடியாகச் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை எத்தனை என்பது முழுமையாகச் சுத்தம் செய்த பின்னரே உறுதி செய்யப்படும்.
ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வுகளின் போது மீட்கப்பட்ட இரு எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எஞ்சியிருந்த பகுதிகளும் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தரைமட்டத்திலிருந்து சுமார் சுமார் 2 அடி வரையிலான ஆழத்தில் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அகழ்வுப் பணியின் போது எலும்பு எச்சங்கள் தவிர சில முக்கிய தடயங்களும் கிடைத்துள்ளன:
அதேபோன்று அகழ்வுப் பகுதியில் இருந்து சிறிய வலை போன்ற உயிரிழந்தவர்களின் உடைகளுடன் தொடர்புடைய சான்றுப்பொருள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.