கல்லோயா திட்டம் என்பது கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்பாறை கிராமத்தில் 1949, ஆம் ஆண்டு பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கவால் முன்னெடுக்கப்பட்ட ‘கல்லோயா அபிவிருத்தித் திட்டம்’மூலம் இது இங்கினியாகலை அணைக்கட்டு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குடியிருப்பாக ஆரம்பத்தில் மாற்றப்பட்டது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியில் பிரதமராக 1956 ஏப்ரல் 12 முதல் 1959 செப்டம்பர் 26 வரை எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க பதவியை வகித்தார்.(26/08/1959, ல் சோமராம தேரரால் சுட்டுக்கொல்லப்பட்டார்)
அவருடைய ஆட்சியிலேயேதான் முதலாவது இனப்படுகொலை மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லோயா இக்கினியாக்கலையில் தொடங்கியது..!
1948, தொடக்கம் 1961, வரை அம்பாறை மாவட்டம் உருவாக்கப்படவில்லை மட்டக்களப்பு மாவட்டமாகவே இருந்தது..!
1960,மார்ச்,19,ல், மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்பாறை எனும் புதிய தேர்தல் தொகுதி ஆரம்பிக்கப்பட்டது.
1961, ஏப்ரல்,10, ல் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அம்பாறை மாவட்டம் பிரிக்கப்பட்டது.
அம்பாறை நிர்வாக மாவட்டம் என்ற பெயர் 1978 புதிய அரசியல் திருத்தச்சட்டத் திருத்தத்துக்கு அமைய, “திகாமடுல்ல” தேர்தல் மாவட்டம் என மாற்றப்பட்டது. பதுளைக்குரிய “தெகியத்த கண்டி” பிரதேசமும் பிற்காலத்தில், அதனுடன் இணைக்கப்பட்டு, இன்றைய அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல மாவட்டம் என மாறியது..
1978, ல் புதிய அரசியல் திருத்த சட்டம் ஊடாக அம்பாறை மாவட்டம், திகாமடுல்ல மாவட்டமாக பெயர் மாற்றியபோது எந்த ஒரு தமிழ், முஷ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை எதிர்க்கவில்லை.
1956 ஆம் ஆண்டு யூன் மாதம் 05, ம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட “சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி” என்ற சட்டத்தை எதிர்த்து கொழும்பு பாராளுமன்றத்திற்கு முன் காலிமுகத்திடலில் இலங்கை தமிழ் அரசுக்கட்சியால் தந்தை செல்வா தலைமையில் இடம்பெற்ற சத்தியாக்கிரகம் மீது சிங்கள குண்டர்கள் இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான முதலாவது பெரும் இனவெறித் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது அதுவே தமிழர்கள் சிந்திய முதல் இரத்தம் என்பது வரலாறு.
ஆனால் முதலாவது தமிழினப்படுகொலையானது
தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டங்களை அடுத்து கிழக்கு மாகாணத்தில் அப்போதைய மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லோயா மற்றும் இங்கினியாகலையில் இனப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டன.
கல்லோயா படுகொலைகள் என அழைக்கப்பட்ட முதலாவது தமிழினப்படுகொலை 1956,யூன்,11, திங்கள்கிழமை தான் கல்லோயா பள்ளத்தாக்கில் திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இனப்படுகொலையானது 1956, யூன்,11,12,13,14,15,16, ஆகிய ஆறு நாட்கள் தொடர்ந்தன.
உள்ளூர் காவல் துறையினர் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் இருந்தனர். உள்ளூர் சிங்களவர்கள் அரச வண்டிகளில் ஏறி தமிழர் குடியேற்றங்களை நோக்கிக் கிளம்பினர்.”இங்கினியாகல” என்ற குடியேற்றத்திட்ட ஊரிலும் அதனைச் சுற்றியுள்ள கரும்புத் தோட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1956, யூன் 13, ம் திகதி புதன்கிழமை
துறைநீலாவணை கிராமத்துக்கு உள்நுளைந்த சிங்கள காடையர்கள் மற்றும் இராணுவம் (ஆமி) துறைநீலாவணை வீரத்தமிழர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் சிங்கள குண்டர்கள் இராணுவம் உட்பட 13, பேர் கொல்லப்பட்டதாக அப்போது கூறப்பட்டது. இதுதான் வடகிழக்கில் சிங்கள இராணுவத்துக்கு எதிராக தமிழர்கள் மேற்கொண்ட முதலாவது தாக்குதலாகும்.
அந்த தாக்குதல் துறைநீலாவணையில் இடம்பெற்ற இடம் சீர்பாததேவிக்கு என்னால் (பா.அரியநேத்திரன்) கடந்த 2017, ஏப்ரல்,27, ல் அமைக்கப்பட்ட சிலை அமைந்துள்ளது அந்த சந்தியில் இந்த தாக்குதல் 1956, யூன்,13, ல் இடம்பெற்றது.
உள்ளூர் பெரும்பான்மையின சிங்களக் குடியேற்றவாதிகளால் தமிழர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், சிறுபான்மை தமிழ் மக்கள் மீது அரச இயந்திரத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பாரிய இனப்படுகொலையாக இது கருதப்படுகிறது.
1956, யூன்,11, ல் ஆரம்பித்த இனப்படுகொலையானது 2009, மே,18, வரை தொடர்ந்தது.
அதில் 2009, மே,மாதம் இறுதிப் போரின்போது மட்டும் 1,46,679 தமிழர்கள் கொல்லப்பட்டதாக மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் ஆவணங்களின் வழியே அம்பலப்படுத்தினார். இன்றுவரை எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பது சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்படவே இல்லை.!
2009, மே,18, ல் இனப்படுகொலை இடம்பெறாவிட்டாலும் கடந்த 17, ஆண்டு இன்றுவரை கட்டவிழ்க்கப்பட்ட இன அழிப்பு தொணர்ந்த வண்ணமே உள்ளது..
இனப்படுகொலை 70, ஆண்டுகளாக தொடர்கிறது.
ஒரு இனத்தின் வரலாறு அந்த இனத்தில் உள்ளவர்கள் அறியப்படவேண்டும் !
-பா.அரியநேத்திரன்.
11/06/2026
