விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்திப்பதற்காக அவரது தாயாரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (07) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
நாமல் ராஜபக்ஷவின் நலனை விசாரிப்பதற்காக அவர் சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவும் சிறைச்சாலை வளாகத்திற்குள் சென்றுள்ளார்.
எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் சந்தேகநபராக நாமல் ராஜபக்ஷ கடந்த வெள்ளிக்கிழமை இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
