யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கொன்றில் சாட்சியம் அளிக்க வந்த சாட்சி மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பிலான வழக்கு விசாரணைகளை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகிறது .
உலக வரைபடங்களை ஆராய்
குறித்த வழக்கு விசாரணையில் கடந்த 09ஆம் திகதி சாட்சியம் அளிப்பதற்காக நீதிமன்றுக்கு வந்தவர்கள் , நீதிமன்றில் சாட்சியம் அளித்த பின்னர் , நெடுந்தீவு நோக்கி பயணிப்பதற்காக சென்று கொண்டிருந்தவர்களை மோட்டார் சைக்கிள் தமது முகம்களை மூடி கட்டியவாறு வந்த வன்முறை கும்பல் சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்
தாக்குதலை மேற்கொண்ட கும்பலில் ஒருவர் நெடுந்தீவு பகுதியை சேர்ந்தவர் என தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் அடையாளம் கண்டு பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்
அதன் அடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் வவுனியாவில் பதுங்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் நால்வரையும் கைது செய்தனர்
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து உள்ளூர் தயாரிப்பான கைக்குண்டு , இரண்டு வாள்கள் , இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை பொலிசார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
